முன்னாள் அதிபர் பைடன் மகன், மகளின் பாதுகாப்பு ரத்து: அதிபர் டிரம்ப் அதிரடி

5 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவித்துள்ளார். அமெரிக்காவில் முன்னாள் அதிபர்கள் பதவியைவிட்டு செல்லும்போது அவரும், அவர்களது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது பதவியை விட்டு விலகும்போது முடிவடைந்துவிடும். எனினும் டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவரும் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை 6 மாதங்களுக்கு நீட்டித்தனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனுக்கு 18 பாதுகாப்பு ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர். அவரது மகள் ஆஷ்லேவிற்கு 13 ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

The post முன்னாள் அதிபர் பைடன் மகன், மகளின் பாதுகாப்பு ரத்து: அதிபர் டிரம்ப் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article