ARTICLE AD BOX
சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை ஒட்டி நாளை காலை 8 மணிக்கு அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கிறார். காலை 8.30 மணியளவில் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கிறார். அதைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் வாழ்த்து பெறுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வரின் 72-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்: தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.