ARTICLE AD BOX

Image : Pakistan Cricket
கிறைஸ்ட்சர்ச்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரெஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 18.4 ஓவர்கள் முடிவில் 91 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. அந்த அணியில் குஷ்தில் ஷா 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் ஜேகப் டபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . தொடர்ந்து 92 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.�