ARTICLE AD BOX
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிர்ஷ்டத்தால் வென்றதாக அந்த அணியின் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதலில் கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை 132 ரன்னுக்கு கட்டுப்படுத்தியும் இருந்தது.
இந்திய வியூகத்தில் சிக்கிய இங்கிலாந்து
நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் வந்திருந்தது. மேலும் அவர்களிடமிருந்து மூன்று சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர் மட்டுமே பிரதான சுழல் பந்துவீச்சாளர். மற்ற இருவரும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்தியா ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே எடுத்துச் சென்று ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்திய பவுலிங் யூனிட்டில் மூன்று பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இங்கிலாந்து அணி இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாட முடியாமல் சிக்கியது. குறிப்பாக வரும் சக்கரவர்த்தி பந்துவீச்சை எப்படி விளையாடுவது? என்றே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தெரியவில்லை.
இந்திய அணி அதிர்ஷ்டத்தால் வென்றது
முதல் டி20 போட்டி குறித்து பேசி இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சர் கூறும்பொழுது “கொல்கத்தா கண்டிஷன் எனக்கு மற்ற பந்துவீச்சாளர்களை விட கொஞ்சம் கூடுதல் சாதகமாக இருந்தது. மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்து வீச செய்தார்கள். ஆனால் இந்திய அணியில் சில பேட்டர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் அடித்த பந்து காற்றில் சென்றாலும் பீல்டர்களின் கைகளுக்கு செல்லவில்லை. அனேகமாக அடுத்த போட்டியில் அந்த பந்துகள் எல்லாம் கைகளுக்கு சென்றால், இந்திய அணி 40 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கும்”
இதையும் படிங்க : கம்பீர் கங்குலியை திட்டியதை அவரிடம் சொன்னேன்.. அவர் இதைத்தான் சொன்னார் – மனோஜ் திவாரி பேட்டி
“எப்பொழுதும் நீங்கள் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் முயற்சி செய்ய வேண்டும். பவர் பிளேவில் அவர்களது மூன்று நான்கு விக்கெட்டுகளை உங்களால் கைப்பற்ற முடிந்தால், அவர்கள் மிடில் ஓவரில் பேட்டிங் செய்யும் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் கூடுதலாக அங்கு முயற்சி செய்ய வேண்டும். அந்தப் போட்டியில் எங்களுக்கு அது பலன் அளிக்காமல் போய்விட்டது. தற்போது நாங்கள் இந்திய தொடரை மட்டுமே யோசிக்கிறோம் சாம்பியன்ஸ் டிராபியை யோசிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.
The post முதல் டி20 இந்தியா அதிர்ஷ்டத்தால் ஜெயிச்சது.. அடுத்து 40/6னு செய்வோம் – ஜோப்ரா ஆர்ச்சர் சவால் appeared first on SwagsportsTamil.