ARTICLE AD BOX
Bizarre News: வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் என பிரித்தால் அது நிச்சயம் திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தை வாழ்வின் முதல் இன்னிங்ஸ் என்றும் திருமணத்திற்கு பிந்தைய காலகட்டத்தை வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றும் சொல்லலாம்.
Bizarre News: 2 நாள்களில் குழந்தையை பெற்ற மணப்பெண்
முதல் இன்னிங்ஸில் ஓரளவு சுமாராக விளையாடினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் அடைய விரும்பும் இலக்கை எட்டலாம். அந்த வகையில், திருமண வாழ்வை மகிழ்ச்சியாய் தொடங்கும் தம்பதியர்களும் பெரிய கனவுடன் அந்த உறவுக்குள் நுழைவார்கள். எதிர்கால திட்டமிடல்கள், குழந்தைகள் என வாழ்வின் அனைத்து சந்தோஷங்களை நோக்கி புதிய பயணத்தை அவர்கள் தொடங்குவார்கள்.
அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்த இரண்டே நாள்களில் மணப்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தது, மணமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
Bizarre News: தாயும் சேயும் நலம்
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்து 2 நாள்கள் சந்தோஷமாக ஒன்றாகவே இருந்துள்ளனர். அப்போது திடீரென மணப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட பின்னர், அந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த பெண்ணும், குழந்தையும் தற்போது நலமுடன் இருக்கின்றார்கள்.
Bizarre News: திருமணத்திற்கு பின் என்ன நடந்தது...?
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஜாஸ்ரா கிராமத்தில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி அந்த பெண் புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அவரின் வருகை அந்த வீட்டிற்கே பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விருந்தினர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்துவீட்டினர் அனைவரும் மணப்பெண் பார்த்து ஆசிர்வதித்துள்ளனர், அன்று சில சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
அடுத்த நாள் (பிப். 26) காலையில், அந்த பெண் எழுந்து குடும்பத்தினர் அனைவருக்கும் தேநீர் போட்டு கொடுத்துள்ளார். அன்றைய தினமும் மகிழ்ச்சிகரமாகவே சென்றுள்ளது. ஆனால், மாலை வேளையில்தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. அவர் மாலையில் கடுமையான வலியில் துடித்துள்ளார், கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அவரின் வயிற்றில் கடுமையான வலி என்றும் கூறி உள்ளார். உடனே மணமகன் வீட்டார் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
Bizarre News: மணமகன் தான் காரணமா...?
அவரை சோதித்ததில் அவர் கர்ப்பமாகியிருப்பதாகவும், உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். மேலும், மணமகனிடம் மருத்துவ ஒப்புதல் படிவங்கள் கையெழுத்து பெறப்பட்டது. அடுத்த 2 மணிநேரத்தில் அந்த அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதனால், மணமகன் வீட்டார், மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். மணமகளின் தாயாரிடம், மணமகனின் தாயார் கடுமையாக சண்டைப் போட்டுள்ளார். அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை மறைத்து தனது மகனுக்கு திருமண செய்துவைத்துவிட்டதாக கடுமையாக திட்டி உள்ளார். அதற்கு அந்த பெண்வீட்டார், இதற்கு மணமகன்தான் காரணம் என்றும் அவரும், தங்களின் மகளும் திருமணத்திற்கு முன்னரே அடிக்கடி சந்தித்து வந்தனர் என்றும் கூறி உள்ளனர்.
Bizarre News: மறுக்கும் மணமகன்
மணமகளின் தந்தை இதுகுறித்து கூறுகையில், கடந்தாண்டு மே மாதமே இருவருக்கும் திருமணம் உறுதியாகிவிட்டது. அப்போது இருந்தே இருவருக்கும் பழக்கம் இருந்து வருகிறது" என்றார். ஆனால், மணமகன் இந்த கூற்றை முற்றிலும் மறுத்துள்ளார். "தனக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அதாவது அக்டோபரில்தானஅ திருமணம் நிச்சயம் ஆனது. இந்த பெண்ணை இனி நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என கூறியுள்ளார். மேலும், மணமகன் வீட்டாரும் அந்த பெண்ணை ஏற்கமாட்டோம் என கூறி உள்ளார்.
Bizarre News: மணமகன் வீட்டார் சொன்னது என்ன?
திருமணத்திற்கு செய்த செலவுகள் எதையும் திருப்பித் தரவேண்டாம் என கூறிய மணமகன் வீட்டார், ஆனால் திருமணத்திற்கு தாங்கள் கொடுத்த பொருள்கள் மற்றும் வந்த பரிசுகள் அனைத்தையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் மணமகள் வீட்டாரிடம் கூறி உள்ளனர்.
Bizarre News: தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற பெண்
இதற்கிடையில், மணமகன் குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி தனது மகளை கைவிட்டதாக மணமகள் வீட்டார் குற்றஞ்சாட்டினார். தனது மகளை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாங்களும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் குழந்தையை நாங்களே வளர்ப்போம் என்றும் மணமகள் வீட்டார் கூறுகின்றனர்.
ஆனால், தனது பெண் அந்த மணமகனைதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும் அவன் தனது பெண்ணை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவள் இறந்துவிடுவாள் என்றும் மணமகள் வீட்டார் கூறினர்.மணமகள் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்குத் திரும்பினார். தற்போது கிராம பஞ்சாயத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.
மேலும் படிக்க | உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்?
மேலும் படிக்க | மேடையில் மணமகன் செய்த செயல்...! திருமணத்தை நிறுத்திய மாமனார் - ஷாக்கிங் சம்பவம்
மேலும் படிக்க | ஆண்கள் பற்றியும் யோசிங்க... மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ