ARTICLE AD BOX
முடி வளர்ச்சிக்கு முட்டை பேக் ஓர் சிறந்த மருந்ததாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
புரதம் நிறைந்த முட்டை முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா..
ஆம்.. முடி வளர்ச்சிக்கு முட்டை ஓர் சிறந்த மருந்ததாக பயன்பாட்டில் இருந்து வருகிறது
மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் A, D, E மற்றும் பயோட்டின், தலைமுடிக்கான ஊட்டச்சத்தை அளித்து முடி உடைவை தடுக்கும்
முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவில் இருக்கும் வைட்டமின் B12, முடி வேர்க்காலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும்.
மஞ்சள் கருவானது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும். வெள்ளை கருவானது எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்துகிறது.
பொதுவாக இரண்டுமே முடி வளர்ச்சிக்கு அதிகளவில் உதவும் நிலையில், மஞ்சள் கருவில் இருக்கும் பயோட்டின் ஆனது முடி வளர்ச்சிக்கு கூடுதலாக உதவுகிறது.
முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு தனியான எடுத்து நன்கு கலக்கி, தலையில் பேக் போன்று போட்டு 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.