ARTICLE AD BOX
தற்போதைய சூழலில் வயது மற்றும் பாலின பேதமின்றி பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகிறது. குறிப்பாக, மாறி வரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
மேலும், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை இருக்கும் என பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். சிலருக்கு ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாகவும் முடி உதிர்வு இருக்கும். இப்படி எத்தனையோ காரணங்களை கூறிக் கொண்டே போகலாம்.
முடியை பராமரிப்பதற்கு ஏராளமாக பணம் செலவு செய்து ஷாம்பு, ஹேர் சீரம் போன்றவற்றை தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கருத்து நிலவி வருகிறது. ஆனால், இயற்கையான முறையிலேயே தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
குறிப்பாக, இயற்கையான பொருளை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து தான் மீண்டு வந்ததாக நடிகை ஆனந்தி தெரிவித்துள்ளார். அதிலும், ஒரே ஒரு பொருளை மட்டுமே தான் உபயோகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அரிசி வடித்த கஞ்சியை தலைமுடி பராமரிப்பில் தான் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அரிசியை வடித்ததும் அதன் கஞ்சியை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இதனை மறுநாள் காலையில் தலை முடி முழுவதும் தடவி விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
இந்த அரிசி வடித்த கஞ்சியை பயன்படுத்தியதன் மூலம் தனக்கு பெருமளவு முடி உதிர்வு பிரச்சனை குறைந்ததாக நடிகை ஆனந்தி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.