ARTICLE AD BOX

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை பெற கைவிறல் ரேகை பதிவு அவசியம்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டை உறுப்பினர்களும் நியாய விலை கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெரும் AAY, PHH குடும்ப அட்டை உள்ள அனைத்து பயனாளிகளுமே கைவிரல் ரேகை பதிவை தொடர்புடைய ரேஷன் கடைகளில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.