முகலாய மன்னன் அவுரங்கசீப், நல்லவரா கெட்டவரா? தொடர்ந்து எதிரொலிக்கும் கேள்வி! வரலாறு என்ன?

1 day ago
ARTICLE AD BOX

முகலாய மன்னன் அவுரங்கசீப், நல்லவரா கெட்டவரா? தொடர்ந்து எதிரொலிக்கும் கேள்வி! வரலாறு என்ன?

Delhi
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் முகலயாய பேரரசை நிறுவிய பாபர் பெயரிலான மசூதி பன்னேடுங்கால பிரச்சனையாக இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருந்து வந்தது. தற்போது அதே போல பாபரின் கொள்ளு பேரன்களில் ஒருவரான அவுரங்கசீப் கல்லறையும் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் இந்த முகலாயர்கள்? யார் இந்த அவுரங்கசீப்? இந்துத்துவ அமைப்புகள் இத்தனை கடுமையாக எதிர்ப்பது எதனால்? என்கிற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.

maharashtra Aurangzeb

முகலாயர்கள் எனபவர்கள் யார்?

முகலாயர்கள் குறித்து இருவித கருத்துகள் உண்டு; துருக்கியர்கள் அல்லது மங்கோலியர்கள். தற்போதைய இந்திய நிலப்பரப்பைப் பொறுத்தவரை அன்னியர்கள்; இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பது பொது கருத்து.

முகலாயப் பேரரசு இந்தியாவில் காலூன்றியது எப்படி?

முகலாய மன்னர் பாபரால் தற்போதைய இந்திய நிலப் பகுதியில் முகலாயப் பேரரசு காலூன்ற தொடங்கியது. சுமார் 300 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயப் பேரரசு அதிகாரத்தில் இருந்தது.

முகலாயப் பேரரசின் முக்கியமான மன்னர்கள் யார்?

பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீர் (ஒளரங்கசீப்).

தற்கால இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் யார்?

இரண்டாம் பகதூர் ஷா. அவரது சகாப்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிலைபெற்று வலுவடைந்தது.

அவுரங்கசீப் என்பவர் யார்?

தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான், அவுரங்கசீப்பின் தந்தை. அவரது தாயார்தான் மும்தாஜ். மும்தாஜின் கல்லறை அமைந்துள்ள இடம்தான் தாஜ்மஹால். அவுரங்கசீப் மீது தந்தை ஷாஜஹானுக்கு மிகப் பெரிய நம்பிக்கை இல்லாத போது ஆட்சிப் பொறுப்புகளில் அங்கம் வகித்து வந்தார். ஒரு கட்டத்தில் தந்தை ஷாஜஹானை மரணிக்கும் வரை சிறையில் அடைத்து வைத்திருந்தார் அவுரங்கசீப்.

அவுரங்கசீப் ஆட்சிக் காலம் எப்படி இருந்தது?

தற்போதைய இந்திய நிலப்பரப்புக்குள் ஊடுருவி ஆட்சி அமைத்த முகலாயப் பேரரசர்களிலேயே இந்நிலப்பரப்பின் பெரும்பான்மை பகுதிகளைக் கைப்பற்றியவர் அவுரங்கசீப். ஆனால் தமிழ்நாட்டில் அவுரங்கசீப் ஆட்சி செலுத்தவில்லை.

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்துக்களில் ராஜபுத்திரர்கள், ஜாட்கள் மற்றும் சீக்கியர்கள் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டதாக வரலாற்று பக்கங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அவுரங்கசீப் ஆட்சி நிவாகத்தில் ராஜபுத்திரர்கள் கணிசமாக பங்கு வகித்தனர் என்பதும் வரலாற்று தகவல்தான்.

அவுரங்கசீப் மதமாற்றம் செய்தாரா?

இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை நிர்வகித்த முஸ்லிம் மன்னராக அவுரங்கசீப் கோலோச்சிய காலத்தில், இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுவதற்கான எந்தவித சான்றுகளும் இல்லைதான். மதமாற்றத்தில் அவுரங்கசீப் நாட்டம் செலுத்தியதைவிட ஆட்சி அதிகாரங்களை - கோட்டை கொத்தளங்களை கைப்பற்றுகிற 'நாடுபிடி' வெறி கொண்டவராகவே அவுரங்கசீப் இருந்து வந்துள்ளார்.

அவுரங்கசீப்பை இந்துத்துவா அமைப்பினர் கடுமையாக வெறுக்கக் காரணம் என்ன?

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்தான் இத்தகைய வெறுபுக்கு காரணம். குறிப்பாக மகாராஷ்டிராவில் மராத்திய மாமன்னர் சிவாஜியின் மகன், அவுரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் மராத்தி மக்களுக்கு அவுரங்கசீப் மீதான பெருங்கோபத்துக்கு காரணமே இதுதான். அவுரங்கசீப்பை மராத்திய மக்கள், தங்களை அடிமைப்படுத்தியவர் என கருதுகின்றனர்; அதனால் அவுரங்கசீப் கல்லறை என்பதே மராத்திய மக்கள் அடிமைகளாக இருந்த அவமான காலத்தை நினைவூட்டுவதாக கோபப்படுகின்றனர்; இதற்காகவே அவுரங்கசீப் கல்லறையை தகர்க்க வேண்டும் என்கின்றனர்.

அவுரங்கசீப் கல்லறை எங்கு உள்ளது?

அவுரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிரா மாநிலத்தில் குல்தாபாத் எனும் சிற்றூரில் உள்ளது. அவுரங்கசீப் தமது இறுதி காலத்தில் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, பெரும்பாலான பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் இறந்து தனிமை நோயில் தவித்திருக்கிறார். இதனால் வெறுத்துப் போன அவுரங்கசீப் தமது உடலை எளிமையாக ஒரு இடத்தில் அடக்கம் செய்துவிட்டால் போதும் என அறிவுறுத்தி இருந்தாராம். இதனாலேயே மகாராஷ்டிராவின் குல்தாபாத் எனும் சிற்றூரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது.

Take a Poll

More From
Prev
Next
English summary
In Uttar Pradesh's Ayodhya, the mosque named after Babur, the founder of the Mughal Empire, remained a decades-long controversy, posing a challenge to India's secularism. Similarly, the tomb of Aurangzeb, one of Babur’s great-grandsons, has now become a major point of tension in India.
Read Entire Article