முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா? - கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

9 hours ago
ARTICLE AD BOX

ரயில்வே தேர்வு எழுத தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக மாணவர்கள் கடன் வாங்கி சென்ற நிலையில், திடீரென அத்தேர்வை ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த செயல் கண்டனத்துக்குரியது, தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும் எனங அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : அரசு வெளியிட்டிருக்கும் 2 முக்கிய அறிவுறுத்தல்கள்

காஞ்சிபுரம் மாநகர அதிமுக தெற்கு பகுதி கழகம், 47 வது வார்டு, 50 வது வார்டு சார்பில் காஞ்சிபுரம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.‌சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் கலந்துக்கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.  

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியதாக உள்ளது,கேலி கூத்தாக அமைந்திருக்கிறது. ஈரோட்டில் பட்டப்பகலில் ஜான் அவர்களை மனைவியின் கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது உளவுத்துறையும், சாலை ரோந்து பணி காவலரும் என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், மேலும் பட்டப் பகலில் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரிந்து போயிருக்கிறது, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, இதனை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது மட்டுமில்லாமல் தமிழ்நாடு மக்கள் பாதுகாப்பான மனநிலை இல்லையென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அரசு டாஸ்மாக் 1000 கோடி ஊழல் தொடர்பாக இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிப்பதை, நீதிமன்றத்துக்கு நாடி இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. மதுபான ஊழலில் சிறைக்கு சென்ற டெல்லி, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாடு நான்காவது மாநிலமாக உள்ளது.  இதற்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் K.U.S.சோமசுந்தரம்,மாவட்ட மாணவரணிச் செயலாளர் திலக்குமார்,மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், பகுதி செயலாளர்கள் கோல்ட் ரவி,பாலாஜி,ஜெயராஜ்,ஒன்றியச் செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், மாமன்ற உறுப்பினர் பிரேம்,அதிமுக நிர்வாகிகள் பிரவீன்,சதீஷ்,உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | சென்னை பெண்களுக்கு குட் நியூஸ்..! பிங்க் ஆட்டோ விண்ணப்பம் வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article