மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்த அரிய பரிசு!

4 hours ago
ARTICLE AD BOX

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கச் செல்பவர்கள் விதவிதமான பரிசுகளைக் கொடுத்தபடி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவரின் வேண்டுகோளை ஏற்று எல்லாரும் அண்மைக்காலமாக புத்தகங்களையே வழங்கிவருகிறார்கள். இதில் இன்று அவருக்கு அரிய ஒரு பரிசு கிடைத்துள்ளது. 

அது, 1812ஆம்ஆண்டில் வெளியிடப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் முதல் அச்சுப் பதிப்பு!

பரிசாகக் கொடுத்தவர், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் இ.ஆ.ப. அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன். 

அவரை நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாட்டு அரசு நியமித்தது. அதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இருவருக்குமிடையே சந்திப்பு நிகழ்ந்தது. 

அப்போதுதான், பாலகிருஷ்ணன் பழம்பெருமையான இந்த நூலை முதலமைச்சருக்கு வழங்கினார். 

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ” தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன்.

1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார்!அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்!” என்று வாழ்த்தியுள்ளார். 

Read Entire Article