மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

13 hours ago
ARTICLE AD BOX

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் குழு ஒன்று தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் விடியோ வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. பின்னர் இதுகுறித்து கங்கா நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் சனிக்கிழமை புகார் அளித்தார். புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவர் காலித் பிரதானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதான் மற்றும் மூன்று பாதுகாப்புப் பணியாளர்களை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருந்ததையும், ஹோலியின் போது விடியோ வைரலானதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு உள்ளூர் இந்து குழுக்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article