ARTICLE AD BOX
மீம்ஸ் போட்டே லட்சக்கணக்குல வருமானமா? என்ன சொல்றீங்க!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோலாகலமாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தியாவில் அதிகமானவர்கள் சமூக வலைத்தளங்களிலும் கூகுளிலும் தேடப்பட்ட ஒரு விஷயமாக கும்பமேளா இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு மீம்ஸ்களை (Memes)உருவாக்கி வழங்கும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டி உள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல்வேறு நிறுவனங்களும் மீம்ஸ்கள் வாயிலாக மக்களை சென்று சேர்வதற்காக 50 கோடி ரூபாய் செலவு செய்திருக்கின்றன மீம் சாட்( meme chat) என்ற மீம்ஸ்களுக்கான தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கைலேஷ் கேரின் பாடலை பிரபலப்படுத்துவதற்காக தங்கள் நிறுவனம் வேலை செய்ததாக மீம்சாட் கூறுகிறது. இதன் மூலம் அந்த பாடலுக்கு 30 மில்லியன் பார்வைகளும், 5 மில்லியன் லைக்குகளும் கிடைத்தனவாம்.

மேலும் மகா கும்பமேளாவில் சுமார் 20 பிராண்டுகளுக்காக தங்கள் நிறுவனம் மீம்ஸ்களை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்ததாக மீம் சாட் நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது மகா கும்பமேளா என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு நிகழ்வு ,கோடிக்கணக்கான மக்கள் இதற்கு நேரில் வருகிறார்கள், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விஷயங்களை படிக்கிறார்கள் எனும் போது அதனை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ்களை உருவாக்கி மக்களிடம் சென்று சேர்த்தோம் என மீம் சாட் நிறுவனம் கூறுகிறது.
அதேபோல குரோத் ஜெட் மீடியா (growth jet media) என்ற நிறுவனம் மீம்ஸ் மூலம் மார்க்கெட்டிங் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நிறுவனம் ஸெப்டோ, ஸ்லீப் வெல் உள்ளிட்ட 12 பிராண்டுகளுக்காக மகா கும்பமேளாவை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ் மூலம் விளம்பரங்களை செய்ததாக கூறியுள்ளது. மகா கும்பமேளா தீமை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சுமார் 75 பிராண்டுகளுக்காக மீம்ஸ்கள் மூலம் மார்க்கெட்டிங் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சமூக வலைத்தள பக்கங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பக்கங்களில் இது போன்ற பிராண்டுகளுக்கான விளம்பரம் செய்வதன் மூலம் ஒரு ரீலுக்கு 4000 ரூபாயும் , ஒரு ஸ்டோரிக்கு 3000 ரூபாயும் என வருமானம் கிடைப்பதாக தெரிகிறது. அதிகமான ஃபாலோவர்களை கொண்ட மீம்ஸ் பக்கங்களுக்கு அதிக
பாரம்பரியமான மார்க்கெட்டிங் முறைகளை ஒப்பிடும்போது நவீன கால இளைஞர்களுக்கு மீம்ஸ்கள் வாயிலாக மார்க்கெட்டிங் செய்வது தான் சிறந்தது என இவர்கள் கூறுகின்றனர். பிளிப்கார்ட் நிறுவனம் 10 நாட்களில் மட்டும் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் மீம்ஸ்களை அடிப்படையாகக் கொண்டு செய்த விளம்பரத்தின் மூலம் 35 ,000 லைக்குகளையும், 30 மில்லியன் பார்வைகளையும், 5,000 கமெண்ட்களையும் பெற்றிருக்கிறதாம்.
மீம்ஸ்கள் சிக்கலான விஷயங்களை கூட மக்களுக்கு புரிய வைத்து விடும் என்பதால் இதற்கு மவுசு அதிகரிப்பதாக இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika