ARTICLE AD BOX
இலங்கை-தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் , 119 தமிழ்நாடு மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என்றும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை 23.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்வதாகவும், இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Read more : “எனக்கு உன்ன விட, உன்னோட பொண்ண தான் பிடிச்சுருக்கு” காதலனால், காதலியின் மகளுக்கு நேர்ந்த சோகம்..
The post மீனவர்கள் கைது விவகாரம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.