ARTICLE AD BOX
மீனம் ராசிக்கு ஆரோக்கியத்தில் எச்சரிக்கை.. தினமும் தவறாமல் செய்ய வேண்டியது இதுதான்
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மாசி முடிந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம் ராசிக்காரர்களுக்கு அனுமன், நரசிம்மர், விநாயகரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பங்குனி மாதத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் வருகிறார். அதேபோல, அடுத்த இரண்டரை வருடங்களுக்கு உங்கள் ராசிக்கு சனி வருகிறார். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
வண்டி, வாகன விஷயங்களில், ஆரோக்கியம், கால், பாதம், முட்டி வலி, தூக்கமின்மை, அலர்ஜி, கோபம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். திருமண அமைப்புகள், புத்திர சந்தானம் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மிகப்பெரிய பதவிக்குச் செல்வதற்கான வாய்ப்புள்ளது. படித்த தொழிலைவிட தெரியாத தொழிலுக்குச் சென்று ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை கொடுப்பார்கள். பணிவோடு இருப்பது நல்லது. பணிவு இல்லாவிட்டால் மீனத்துக்கு ஏழரை சனி ஜென்ம சனியில் அனைவரும் விரோதி ஆகிவிடுவார்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனைவி, தாய், தந்தை, சொல் பேச்சை கேட்பது நல்லது.
ரத்தபந்த உறவினர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். அதனை நீக்கிவிட்டால் அனுகூலம், சந்தோம், மிகப்பெரிய ஏற்றங்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டைவிட ஒரே பரிகாரம் உங்களுக்கு உடற்பயிற்சி தான். உடற்பயிற்சி செய்தால் யோக பலன்கள் கிடைக்கும்.
பண வரவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்த படபடப்பு நீங்கும். உத்திராடம் எனும் சனி நட்சத்திரம் இருக்கக்கூடிய ராசிக்காரர்கள் எதனையும் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. ஜென்மசனி நல்ல பலன்களையும், சந்தோஷத்தையும் கொடுக்க ஆரம்பிக்கும்.