ARTICLE AD BOX
இயக்குனர் மணிரத்னம், ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் படங்களை மாறி மாறி இயக்கி வரும் நிலையில், தற்போது அவர் அடுத்ததாக ஒரு ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "தக்லைஃப்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், "தக்லைஃப்" படத்தை முடித்துவிட்ட மணிரத்னம், அடுத்ததாக ஒரு ரொமான்ஸ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக "ஓ காதல் கண்மணி" மற்றும் "காற்று வெளியிடை" ஆகிய இரண்டு ரொமான்ஸ் படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார். அதன் பின்னர் "செக்கச் சிவந்த வானம்" என்ற ஆக்ஷன் படத்தையும், "பொன்னியின் செல்வன்" இரு பாகங்களாக வெளியான சரித்திர படத்தையும் இயக்கினார்.
தற்போது "தக்லைஃப்" என்ற ஆக்ஷன் படத்தையும் முடித்துவிட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்திற்காக பணியாற்ற இருக்கிறார். இதில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. "தக்லைஃப்" படம் வெளியானதும், இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.