மீண்டும் முதலிடத்தில் ;சிங்கப்பெண்ணே'.. 'சிறகடிக்க ஆசை'க்கு டிஆர்பியில் எந்த இடம்?

22 hours ago
ARTICLE AD BOX

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் நிலை மாறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கடந்த வாரம் ’மூன்று முடிச்சு’ என்ற சீரியல் முதல் இடத்தை பிடித்த நிலையில், தற்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ’சிங்க பெண்ணே’ சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. ’மூன்று முடிச்சு’ இரண்டாவது இடத்தையும், ’கயல்’ மூன்றாவது இடத்தையும், ’மருமகள்’ நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. வழக்கம்போல், முதல் நான்கு இடங்களிலும் சன் டிவியின் சீரியல்களே முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாவது இடத்தில் ’அன்னம்’ ஏழாவது இடத்தில் ’எதிர்நீச்சல் 2’ ஆகிய சீரியல்கள் உள்ளன.

மேலும், எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் ’பாக்கியலட்சுமி’, ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஆகியவை உள்ளன. பத்தாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் உள்ளது.

Read Entire Article