ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி கடந்த 2021-ஆம் ஆண்டு வரை 205 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 39 அரைசதம் என 5528 ரன்கள் குவித்துள்ளார். தனது ஐபிஎல் கரியரில் பெரும்பாலான ஆண்டுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் கழித்திருந்தார்.
சி.எஸ்.கே அணியில் இணையவுள்ள சுரேஷ் ரெய்னா :
மேலும் தல தோனிக்கு அடுத்து தமிழக ரசிகர்களால் சின்னதல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு காரணமாக ஓராண்டு விளையாடாமல் இருந்தார். பின்னர் படிப்படியாக சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் ஓய்வையும் அறிவித்தார்.
சென்னை அணியின் வரலாற்று வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த அவர் ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட் தொடர்பான பணிகளையே செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஐபிஎல் போட்டிகளின் போது அவர் வர்ணனையாளராக செயல்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மீண்டும் அவர் சிஎஸ்கே அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் இருந்து வருகிறார். அவருக்கு உதவியாக மைக்கல் ஹஸ்ஸி பேட்டிங் பயிற்சி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் வேளையில், எரிக் சிம்மன்ஸ் பவுலிங் பயிற்சியாளராகவும், ராஜூகுமார் என்கிறவர் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ் குமாருக்கு பதிலாக 2025 ஐபிஎல் தொடருக்கு புதிய பில்டிங் கோச்சாக சுரேஷ் ரெய்னா என நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பிலோ அல்லது சுரேஷ் ரெய்னா தரப்பிலோ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க : 4 ஆவது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நிகழ்த்திய அசத்தல் சாதனை.. முழு விவரம் இதோ
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பீல்டராக இருந்த அவர் சென்னை அணிக்கும் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளதால் அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் இந்த பதிவில் வழங்கப்பட்டாலும் தவறில்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது
The post மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருக்கும் சுரேஷ் ரெய்னா – விவரம் இதோ appeared first on Cric Tamil.