ARTICLE AD BOX
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் "அன்பிற்கினியாள்" என்ற திரைப்படத்தில் தந்தை மகளாகவே நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அறிமுக இயக்குநர் உதயா என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அருண்பாண்டியன் இணைந்து நடிக்க உள்ளனர். இது ஒரு திரில்லர் கதைக்களம் கொண்ட படம் என்பதுடன், பழிவாங்கும் அம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அருண்பாண்டியனுடன் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா என்பவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களின் மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் முக்கிய மையப்புள்ளியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில், கீர்த்தி பாண்டியன் சென்னையில் பணிபுரியும் கேப் டிரைவராகவும், அருண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியே வந்து முக்கிய ஒரு நபரை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் உதயா இந்த படம் குறித்து கூறுகையில், "இந்த படத்தின் கதைக்காக பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போன்ற ஒரு நடிகை தேவைப்பட்டபோது, எனக்கு முதலில் ஞாபகம் வந்தது கீர்த்தி பாண்டியன் தான். "அன்பிற்கினியாள்" படத்தை பார்த்த பிறகே அவரை தேர்வு செய்தேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த படம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் பாடத்தையும் வழங்கியுள்ளது. இது கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.