மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

1 day ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசு இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரியும் அதிகாரிகளை அவ்வப்போது பணியிட மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த அறிவிப்பில் “ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த  ப. ஸ்ரீ வெங்கட பிரியா ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அரசு கூடுதல் செயலாளராக” நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், “பள்ளிக் கல்வித்துறை சிறப்பு செயலாளராக இருந்து வந்த ச. ஜெயந்தி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக” நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், இவர் “பள்ளி கல்வித்துறையின் அரசு முழு கூடுதல் சிறப்பு  செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக” தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article