மீண்டு வரும் பாகிஸ்தான் பொருளாதாரம்!. ஆனாலும் நெருக்கடி!. என்ன காரணம்?

17 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

மீண்டு வரும் பாகிஸ்தான் பொருளாதாரம்!. ஆனாலும் நெருக்கடி!. என்ன காரணம்?

News

அதிக நிதி நெருக்கடியை சந்திக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இருப்பினும் தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பணவீக்கம் (Inflation) 38% இலிருந்து 1.5% ஆகக் குறைந்துள்ளது, மேலும், பாகிஸ்தானின் பங்குச் சந்தை (Stock Market) கடந்த ஆண்டு 84% உயர்வு கண்டுள்ளது, இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட பாகிஸ்தான் சந்தையை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு தளமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மீண்டு வரும் பாகிஸ்தான் பொருளாதாரம்!. ஆனாலும் நெருக்கடி!. என்ன காரணம்?

ஆனால், முக்கியமான பிரச்சனை என்னவென்றால், உண்மையில் பாகிஸ்தான் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதாகத் தோன்றினாலும், நாட்டின் பணக்காரர்கள்(Wealthy Elite) அதன் எதிர்காலத்தில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதுவே நீடித்த வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும்பாலும் நுகர்வை (Consumption) சார்ந்துள்ளது. இதுது 80-85% பொருளாதாரத்தின் பங்காக இருக்கிறது. இது தற்காலிகமாக வளர்ச்சியைத் தூண்டும், ஆனால் நீடித்த மற்றும் உண்மையான வளர்ச்சி (Real Growth) முதலீட்டிலிருந்து (Investment) மட்டுமே வரும். ஆனால் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முதலீட்டு விகிதம் வெறும் 13% மட்டுமே, இது நீடித்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தடையாக உள்ளது. இதே விகிதம் இந்தியாவில் 33% என்பதால், வளர்ச்சி வேகத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு முக்கியமான தடையாக இருப்பது அதிக கடன் சுமை தான்(Massive Debt Burden). 2029க்குள் பாகிஸ்தான் 146 பில்லியன் டாலர் (சுமார் ₹12 லட்சம் கோடி) வெளிநாட்டு நிதி தேவைப்படும். அதாவது, பாகிஸ்தான் கடந்த பல தசாப்தங்களாக கடனில் மூழ்கியிருப்பதால் அரசு பட்ஜெட்டில் 60% பேர் வட்டிப்பணம் செலுத்துவதற்கே செலவாகிறது. மீதமுள்ள 40% தொகை தற்போதைய செலவுகளை (Current Expenditures) மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இது நாடாளுமன்றம், பாதுகாப்பு, நிர்வாகம், மற்றும் அரசாங்க வேலைகள் நடத்துவதற்கே போய்விடுகிறது.

மேலும், முதலீடுகளில் பெரும் பகுதி ரியல் எஸ்டேட் மற்றும் Speculative சொத்துக்களில் செல்கிறது, ஆனால் இது வேலைவாய்ப்பை உருவாக்காது, ஏற்றுமதியை அதிகரிக்காது, அல்லது உண்மையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்காது. எனவே, இந்த முதலீட்டு பொறியிலிருந்து பாகிஸ்தான் தப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுந்து வருகிறது. அதாவது, பாகிஸ்தானின் பொருளாதாரம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும், நீடித்த வளர்ச்சி பெற வேண்டும் என்றால் முதலீட்டு வீழ்ச்சி (Investment Trap) நிலைமையில் இருந்து வெளியேற வேண்டியது அவசியம். ஆனால் இதற்குப் பல்வேறு சவால்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

IMF (International Monetary Fund) மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறது. கடன் திருப்பி செலுத்த முடியாத நிலை காரணமாக, புதிய கடன்களை அதிகமான நிபந்தனைகளுடன் ஏற்கிறது. அதாவது, பாகிஸ்தான் 1950ல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இணைந்தது. அதன் பின்னர், 25 முறை கடன் நிவாரணம் (Debt Bailout) கோரியுள்ளது.

முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்த புதிய கடன் தேவைப்படுகிறது. நாட்டின் வருமானம் குறைவாக இருப்பதால், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கே நிதி போதவில்லை. போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான துறைகளில் செலவிடாமல், கடன் வட்டி கட்டவே பெரும்பான்மை வருவாய் செல்கிறது. பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை, இதுபொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

Take a Poll

இதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் 2024ம் ஆண்டில் உலக வங்கியுடன் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள, 10 ஆண்டுகளுக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும், உலக வங்கி மற்றும் IMF போன்ற சர்வதேச அமைப்புகள் வழங்கும் கடன்கள் இலவசமாக வருவதில்லை. அவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வருகின்றன. மேலும், முக்கியமான முதலீடுகள் இல்லாததால், நாட்டின் வருவாய் வளர்ச்சி பெறவில்லை. இதனால், புதிய வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகாமல், பாகிஸ்தான் கடன் சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது.

FAQ's
  • பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி, உண்மையான முன்னேற்றமா?

    2 ஆண்டுகளுக்கு முன்பு 38% என்ற ஆபத்தான அளவில் இருந்த பாகிஸ்தானின் பணவீக்கம், தற்போது வெறும் 1.5% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பங்குச் சந்தை 84% உயர்வு கண்டுள்ளது, இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தூண்டியுள்ளது. இருப்பினும்,வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பாகிஸ்தானின் குறுகிய கால கடனை வாங்கத் தொடங்கியுள்ளனர், இது நாட்டின் நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் நாட்டில் கடன் சுமை இன்னும் அதிகமாகவே உள்ளது.

  • பொருளாதாரம் முன்னேறுகிறதா? ஆனால் பாகிஸ்தானின் செல்வந்தர்கள் ஏன் முதலீடு செய்ய மறுக்கிறார்கள்?

    பாகிஸ்தானில் பணவீக்கம் குறைந்து, பங்குச் சந்தை உயர்ந்தும், வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வரத்தொடங்கியும் இருந்தாலும், நாட்டின் செல்வந்தர்கள் அதில் ஈடுபடவில்லை.

  • பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது?

    பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு முக்கியமான தடையாக இருப்பது அதிக கடன் சுமை தான்(Massive Debt Burden).

  • வளர்ச்சி வேகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே வித்தியாசம் என்ன?

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முதலீட்டு விகிதம் வெறும் 13% மட்டுமே, இது நீடித்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தடையாக உள்ளது. இதே விகிதம் இந்தியாவில் 33% என்பதால், வளர்ச்சி வேகத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.

Read Entire Article