ARTICLE AD BOX
நவீன தொழில் வளர்ச்சியால் நமது உணவு முறையும் முற்றிலுமாக மாறி வருகிறது. அதில் மேற்கத்திய உணவுகளால் ஈர்க்கப்பட்ட நாம் நமது பாரம்பரிய உணவுகளை விடுத்து மேற்கத்திய உணவுகளை நமக்கு நன்மை அளிக்கிறது என நம்பியுள்ளோம். ஆனால் உலக அளவில் நமது தமிழ்நாட்டு உணவுகளுக்கு மிகவும் பிரபலமான பெயர் உள்ளது. தமிழ்நாட்டு உணவுகளை இன்றளவும் வெளிநாட்டினர் கூட ருசித்து சாப்பிடுகின்றனர். நாம் சாதாரணமாக வீட்டில் செய்யும் சமையல் மிகவும் ருசியான உணவாக இருக்கிறது. ஆனால் நாம் அதன் மேன்மையை மறந்து விட்டு மேற்கத்திய உணவுகளின் மீது நமது நாட்டத்தை செலுத்தி வருகிறோம்.
இதனை குறைக்க நாமே நமது வீட்டில் சுவையான சமையலை செய்வது தான் ஒரு வழி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த தலைமுறையினர் வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் சமையலையே தெரியாமல் வைத்திருக்கின்றனர். நாம் காலை உணவு என்றாலே நமது வீட்டில் இட்லி, தோசை, பொங்கல் எனவே இருக்கும். ஆனால் சிலருக்கு பொங்கல் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம் .அதனை குறைக்கவே, நெய் சேர்த்து சுவையான மிளகு பொங்கல் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ளோம். இதனை நீங்களும் ட்ரை செய்து பார்த்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருள்கள்
2 கப் பச்சரிசி
ஒரு கப் பயத்தம் பருப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகு
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 12
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் -50 கிராம்
மேலும் படிக்க | சுட சுட தக்காளி குருமா செய்யத் தெரியுமா? இதோ அருமையான ரெசிபி!
மேலும் படிக்க | நவ தானிய தோசை இருக்கே! பெஸ்ட் பிரேக்பாஸ்ட் ரெசிபி!
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் சூடாக்கி அதில் பயத்தம் பருப்பு போட்டு வாசனை வர ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு அதனுடன் அரிசியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு முறை களைந்து விட்டு, குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்கு கிளறி விட்டு வேக விடவும். மீண்டு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுத்துக் கொள்ளவும். குக்கரில் வைத்திருந்த அரிசி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு போடவும். அத்துடன் வறுத்து வைத்துள்ளவற்றையும் போட்டு நன்கு கிளறி விடவும். மேலும் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, வெய்ட் போட்டு வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். சுமார் 5 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் திறந்து, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான மிளகு பொங்கல் தயார்.

டாபிக்ஸ்