ARTICLE AD BOX
கள்ளக்காதல் வயப்பட்ட நபர், கள்ளகாதலியின் குழந்தைகளை கடுமையாக தாக்கினார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டம், ஜங்கா ரெட்டி பகுதியில் வசித்து வருபவர் சசி. இவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசி தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: "அம்மா கல்யாணம் வேண்டாம் மா" - சொல்லியும் கேட்காத பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த மகள்.!
இதனிடையே, சசிக்கு, அதே பகுதியில் வசித்து வந்த பவன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் ஒருகட்டத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு
இந்நிலையில், சசியின் குழந்தையால் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுகிறது என நினைத்த பவன், குழந்தைகளை கொடுமைப்படுத்த தொடங்கி இருக்கிறார். குழந்தைகளை கடுமையாக தாக்குவது, மிளகாய்பொடி கலந்த சாதத்தை வழங்குவது, காயமடைந்த இடத்தில் மிளகாய்பொடி தூவி குழந்தைகளின் கண்ணீரை ரசிப்பது என அரக்கத்தனமாக இருந்துள்ளார்.
அதிர்ச்சி செயல்
பவனின் செயல் எல்லை மீறிய நிலையில், ஸ்மார்ட்போன் சார்ஜர் கொண்டு கடுமையாக தாக்கி, காயத்தில் மிளகாய்பொடி தூவி கொடுமை செய்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் சிறார்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினரிடம் சிறார்களிடம் விசாரணை நடத்தி, மேற்கூறிய தகவலை வாக்குமூலமாக பெற்று, பாவனை கைது செய்தனர். மேலும், பவன் தாக்கும்போது, சசியும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் வெறிச்செயல்; மனைவி வெட்டிக்கொலை.!