மிகுந்த வரவேற்பில் டிராகன் நாயகி கயாது லோஹர்..!

3 hours ago
ARTICLE AD BOX

டிராகன் பட நாயகி கயாது லோஹருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிராகன் 3 நாளில் ரூ.50.22 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இந்தப் படத்தில் 3 நாயகிகள் நடித்துள்ளார்கள். அதில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாது லோஹர் 3 நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

படத்தில் முக்கியமான திருப்புமுனைக்கு காரணமாக இருக்கும் கயாது லோஹரின் அழகிற்கும் நடிப்பிற்கும் வாழ்துகள் குவிந்து வருகின்றன.

யார் இந்த கயாது லோஹர்?

நடிகை கயாது லோஹர், அஸ்ஸாமை பூர்விகமாகக் கொண்ட முதல்முறையாக கன்னடத்தில் அறிமுகமானவர். பிறகு ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற மலையாளப் படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

தமிழில் டிராகன்தான் முதல்படம். அடுத்ததாக இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்.

டிராகன் படத்தை கயாது லோஹருக்காக மட்டுமே பார்க்கலாம் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் கயாது லோஹருக்காக பல விடியோக்களை எடிட் செய்து வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

டிராகன் படத்தின் வரவேற்பினால் இன்ஸ்டாவில் கயாது லோஹருக்கு ஃபாலோயர்களும் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article