“மிகவும் நியாயமற்றது”…. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அமைப்பதற்கு டொனால்ட் டிரம்ப் அதிருப்தி…!!

4 days ago
ARTICLE AD BOX

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்  ஆகிய இருவரும் பேசிய நேர்காணல் ஒன்று நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. அதில் இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, இந்தியாவில் இவருக்கு கார் விற்பது மிகவும் கடினமாக இருக்கும். இது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படித்தான் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார். அப்போது எலான் மஸ்க், இந்தியாவில் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 100% வரி விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதுகுறித்து எலான் மஸ்க், இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது எல்லாம் சரி தான், ஆனால் அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று கூறினார்.

நான் இந்தியா பிரதமர் மோடியிடம் சொல்லி இருக்கிறேன். நீங்கள் இதை செய்கிறீர்கள், நாங்களும் உங்களுடன் மிக நியாயமாக இருக்கப் போகிறோம் என்று கூறினார். இந்தியா, அமெரிக்கா மீது வகிக்கும் வரி 36 சதவீதமா என்று நேர்காணல் செய்தவர் கேள்வி எழுப்பிய போது, எலான் மஸ்க் இல்லை.. வாகன இறக்குமதிக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என்று பதிலளித்தார். டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு நிலவி வருகிறது. தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எலான் மஸ்க் முக்கிய பங்கு வகித்தார். இந்த நேர்காணலில், இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவதற்கு டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆனால் எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கினால், அது இந்திய பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வரும். டிரம்பின் அதிருப்தி எலான் மஸ்கின் முடிவை மாற்றுமா அல்லது என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

Read Entire Article