“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

13 hours ago
ARTICLE AD BOX
GoodBadUgly

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது.

படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பிரபல நிறுவனமான விகடன் தளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது “குட் பேட் அக்லி படம் மாஸான படமாக மட்டுமின்றி எமோஷனலான” படமாக இருக்கும் என பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” குட் பேட் அக்லி திரைப்படம் நான் நினைத்தபடி அருமையாக வந்திருக்கிறது. படத்தில் அஜித் சாரின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு மாஸாக இருக்கிறதோ அதே அளவுக்கு எமோஷனல் படத்தில் இருக்கிறது. மொத்த கதையும் அந்த எமோஷனலை சுற்றி தான் நகரும். பெரிதாக பேமிலி ரசிகர்களுக்கு மத்தியில் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் படத்தில் அப்பா- பையன் பாசம் குறித்து விஷயங்கள் இருக்கிறது.

அஜித் சாரை நாம் எப்படி எப்படி பார்க்க விரும்பினோமோ அதனை கொஞ்சம் கொஞ்சமாக படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். படத்தில் அஜித் மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றவுடன் நான் அவருக்கு எதாவது ஆயுதம் கொடுக்கவேண்டும் என விரும்பினேன். அதற்காக தான் தீனா படத்தில் அவர் பயன்படுத்திய Knuckle Duster பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என யோசித்து அந்த ஆயுதத்தை பயன்படுத்த வைத்தோம்.

இந்த படத்தின் தலைப்பை எண்னிடம் அஜித் சார் தான் சொன்னார். அவர் கூறியவுடன் எனக்கும் மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால் உடனடியாக நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். உலகம் ‘குட்’டா இருக்கும்போது நாமும் ‘குட்’டாக இருக்கலாம். உலகம் பேடாக இருந்தால் நாம் ‘அக்லி’ ஆகத்தான் ஆகணும். இதுதான் படத்தோட ஐடியா.

அதைப்போல, படத்தில் மாஸ் மட்டுமில்லை எமோஷ்னளுடன் கூடிய சில கருத்துக்களும் இருக்கிறது. அந்த கருத்துக்கள் திணிக்கப்பட்ட வகையில் இருக்காது படத்துடன் பார்க்கும்போது நீங்கள் ரசிப்பீர்கள்” எனவும் கூறி படத்தின் மீது ஏற்கனவே இருக்கும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அதிகப்படுத்தியுள்ளார்.

Read Entire Article