ARTICLE AD BOX
மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தத் திட்டம் தொடா்பாக பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விரைந்து பயணிக்க வேண்டும் என்ற 1.5 கோடி நடுத்தர வா்க்க மக்களின் விருப்பத்தை உடான் திட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 88 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டு 619 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, புதிதாக 120 இடங்களுக்கு மண்டல வாரியான இணைப்பை மேம்படுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் பயணிக்கவும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட உடான் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் மாவட்டங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சிறிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டா் இறங்குதளங்களுக்கும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.