ARTICLE AD BOX
மார்ச் 6-க்கு இருக்கு சார்.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 120X ஜூம்.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், 6000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மற்றும் கலர் சேஞ்சிங் பேனல் டிசைனில் வெளியாகி மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 14 Pro+ 5G) போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் இப்போது களமிறங்கி இருக்கிறது. இந்த ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை, விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மிட்-ரேஞ்ச் மடலாக வெளியாகிய இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் கிடைத்தன. டிஸ்பிளே, கேமரா, சிப்செட், டிசைனில் அல்டரா-பிரீமியமாக இருந்ததால், மெமரி அதிகமாக இருந்திருக்கலாம் என்று கஸ்டமர்கள் நினைத்தனர்.

இது ரியல்மி நிறுவனத்துக்கு கேட்டுவிட்டது போல, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலை இப்போது களமிறக்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையை தொடங்க இருக்கிறது. மார்ச் 6ஆம் தேதி முதல் ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை தொடங்குகிறது. முதலில் பீச்சர்களை பார்ப்போம்.
ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro+ 5G Specifications): இந்த ரியல்மி போனில் மேஜிக் க்ளோவ் டிரிபிள் ரியர் ஃபிளாஷ் மற்றும் கலர் சேஞ்சிங் பேக் பேனல் கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிசைனில் IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்குடன் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஷாக் ரெசிஸ்டன்ட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. IP69 மூலம் அண்டர் வாட்டர் சூட் சப்போர்ட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி மட்டுமல்லாமல், பிரீமியம் சென்சார்கள் வருகின்றன.
ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சார்) கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார்) வருகிறது. இந்த மெயின் கேமராவில் 6X இன்-சென்சார் ஜூமிங் செய்யலாம். மேலும், 120X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது.
இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மாடலில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஐ கேர் புரொடெக்சன் சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மார்ச் 6ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல மெயின்லைன் ஸ்டோர்களிலும் வாங்கி கொள்ளலாம்.