ARTICLE AD BOX
மார்ச் 27.. சரியான விலைக்கு 2 தரமான POCO போன்கள்.. 6000mAh பேட்டரி, 120W சார்ஜிங், 16GB ரேம், IP68 ரேட்டிங்!
போக்கோ நிறுவனம் வருகிற மார்ச் 27 ஆம் தேதியன்று உலகளவில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போக்கோ எப்7 ப்ரோ (Poco F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) மாடல்களாக இருக்கலாம். இவைகள் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
போக்கோ எப்7 ப்ரோ மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை முறையே ரெட்மி கே80 (Redmi K80) மற்றும் ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) மாடல்களை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இவ்விரு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே கடந்த நவம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது போக்கோ பிராண்டிங்கின் கீழ் மற்ற உலக சந்தைகளுக்கு வருகிறது.

போக்கோ எஃப்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3200 x 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 26ppi பிக்சல் டென்சிட்டி
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 ஸ்கின்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ்
- OIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 ரேட்டிங்
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6000mAh பேட்டரி
- 206 கிராம் எடை
போக்கோ எஃப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3200 x 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 26ppi பிக்சல் டென்சிட்டி
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 ஸ்கின்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ்
- OIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 32 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 ரேட்டிங்
- 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5300mAh பேட்டரி
- 212 கிராம் எடை
போக்கோ எஃப்7 ப்ரோ மற்றும் போக்கோ எஃப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? போக்கோ எஃப்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.49,990 க்கும் போக்கோ எஃப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ வேரியண்ட் ஆனது பிளாக், ப்ளூ மற்றும் க்ரே கலர்களிலும், அல்ட்ரா வேரியண்ட் ஆனது பிளாக் மற்றும் யெல்லோ கலர்களிலும் வெளியாகலாம்.
இதேபோல விரைவில் அறிமுகமாகும் மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, மார்ச் 19 ஆம் தேதியன்று அதன் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஆனது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது வெளியீட்டு சலுகைகளுடன் கூடிய விலையா என்பதை ரியல்மி நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.
இதேபோல ஒப்போ நிறுவனம் அதன் 2 புதிய மாடல்களை மார்ச் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒப்போ எப்29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் ஒப்போ எப்29 5ஜி (Oppo F29 5G) மற்றும் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி (Oppo F29 Pro 5G) என 2 மாடல்கள் அறிமுகமாகும். கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ஒப்போ எப்29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.