ARTICLE AD BOX
மார்ச் 27 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Infinix போன்.. எந்த மாடல்? என்னென்ன அம்சங்கள்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் (Infinix Note 50X) ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். தற்போது இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் அம்சங்கள் (Infinix Note 50X Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். AI நோட், AI ரைட்டிங் அசிஸ்ட் மற்றும் AIGC போர்ட்ரெய்ட் உள்ளிட்ட மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் வெளிவரும். பின்பு IR சென்சார் மற்றும் ஆக்டிவ் ஹாலோ லைட் (Active Halo Light) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பின்பு ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். பர்பிள் (purple), கிரே (grey), க்ரீன் (green) நிறங்களில் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் போன் அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அம்சங்கள்(Infinix Note 40X 5G Specifications): 6.78 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதி இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + AI லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோட் 40எக்ஸ் 5ஜி போன். பின்பு டூயல் வீடியோ (Dual Video), ஃபிலிம் மோட் (Flim Mode), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மெலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார், டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் போன்ற பல்வேறு சிறப்பான ஆதரவுகளுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் லைம் கிரீன் (Lime Green), பால்ம் ப்ளூ (Palm Blue) மற்றும் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் ஆனது ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.