'மார்கோ' நடிகையின் அடுத்த படம் "கே-ராம்ப்"

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் கடந்த டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகை யுக்தி தரேஜாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு "கே-ராம்ப்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜெயின்கள் நானி எழுதி இயக்குகிறார். நாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்கிறார்.

நடிகை யுக்தி தரேஜா கடந்த 2023-ம் ஆண்டு வெளியான "ரங்கபலி" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான மலையாள சூப்பர்ஹிட் திரைப்படம் மார்கோவில் நடித்திருந்தார். "கே-ராம்ப்" அவரது மூன்றாவது படமாகும்.

Read Entire Article