ARTICLE AD BOX

Vijay suriya: தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொடர்ந்து பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்பட்டு வருகிறார். காவி உடை அணிந்து கொண்டு சாதானத்தை காப்பாற்றுவேன என அடிக்கடி பொங்கி வருகிறார். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலப்பதாக சொல்லி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பான ஒரு கேள்விக்கு ‘இதை பற்றி பேசக்கூடாது’ என சொல்லி சிரித்த நடிகர் கார்த்திக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது கார்த்தி நடிப்பில் உருவான மெய்யழகன் படம் அப்போது ஆந்திராவில் வெளியாக வேண்டியிருந்ததால் தான் எப்போதும் சதானத்திற்கு எதிரானவன் அல்ல.. திருப்பதி வெங்கடாச்சல சாமி எனக்கு மிகவும் பிடிக்கும் என கார்த்தி பம்மினார். இதை பவன் கல்யாண் வரவேற்றார்.
ஒருபக்கம் மும்மொழிக்கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் வலுத்திருக்கிறது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தி தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
ஆளும் திமுக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிலும், மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமுல்படுத்தவில்லை என்றால் கல்வி நிதியை கொடுக்க மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் சொல்ல தமிழகத்தில் அது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தமிழகத்தில் இந்தியை எதிர்க்கிறார்கள். அப்படியெனில் தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடாதீர்கள். ஹிந்தியிலிருந்து நடிகர்களை கொண்டு வராதீர்கள். இதை தமிழக அரசியல்வாதிகள் செய்வார்களா?’ என அறிவுப்பூர்வமாக கேட்க, இதுவும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. வியாபரத்திற்கும், மொழி உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

விஜய், கமல் போன்றவர்கள் பவன் கல்யாணுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர்களை விமர்சித்து வரும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘மத்த ஸ்டேட்காரன் நம்மளை எவ்வளவு கழுவி ஊத்துனாலும் அமைதியா இருப்போம். வாயை விட்டா நம்ம படம் அங்க ஓடாது. அதுவும் ஆந்திராக்காரனை பகைச்சுக்கவே கூடாது. அதுதான் நம்மளோட முக்கியமான கலெக்ஷன் சென்டர். பவன் அண்ணே. நீங்க நல்லா திட்டுங்கண்ணே. மான, ரோசம் பாத்தா தொழில் பண்ண முடியுமா’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.