ARTICLE AD BOX
நம்மில் பலர் வீட்டில் சிறிய தோட்டம் வைத்திருப்போம். அதில் பூச்செடிகள், கொய்யா, மா, வாழை, பலா, தென்னை போன்ற மரங்களையும் வளர்த்து வருவோம். சிலர் மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா போன்றவற்றையும் வளர்த்து வருவர்.
தோட்டத்தில் செடிகள் வைப்பதை விட அதை பராமரிப்பது முக்கியம். இல்லையென்றால் செடிகள் வீணாகி விடும். செடிகளுக்கு சரியான நேரங்களில், சரியான அளவில் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் விடவில்லை என்றால் செடி கருகிவிடும். தண்ணீர் அதிகமாக விட்டால் செடி அழுகிவிடும்.
அடுத்ததாக பூச்சி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், பூக்கள் வீணாகி பழங்கள் கிடைக்காது. மேலும், செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க குப்பை, மண்புழு உரம், பஞ்சகவ்யம் போன்றவற்றை இட வேண்டும். அப்போது தான் நல்ல உற்பத்தி கிடைக்கும்.
இந்தநிலையில், மாதுளை செடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என பிரபல நாட்டுபுற பாடகர்கள் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி விளக்கியுள்ளனர். இதுதொடர்பாக அனிதா குப்புசாமியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் படி,
மாதுளை செடிக்கு வேர் காயக் கூடாது. வேர் காய்ந்தால் பூக்கள் உதிர்ந்து விடும். எனவே தினமும் அல்லது தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்ற வேண்டும். மாதுளை செடி வேர்களை அடிக்கடி கவனித்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
மேலும் மாதுளைச் செடி நன்றாக வளர மண்புழு உரமிட வேண்டும். அடுத்ததாக பஞ்சகவ்யம் தெளிக்க வேண்டும். பூச்சி பிடித்தால் கொஞ்சம் வேப்ப எண்ணெய்யை சோப்புக் கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும்.