மாதம் வெறும் ரூ.5000 போதும்.. ரிஸ்கே இல்லாமல் ரூ.8.50 லட்சம் அள்ள முடியும்.. அது எப்படி தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

மாதம் வெறும் ரூ.5000 போதும்.. ரிஸ்கே இல்லாமல் ரூ.8.50 லட்சம் அள்ள முடியும்.. அது எப்படி தெரியுமா?

Chennai
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது மக்கள் சேமிக்க ஆர்வம் காட்டினாலும், ரிஸ்க் இல்லாத சேமிப்பு முறையைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கிறது. ஆனால், ரொம்பவே எளிமையான முறையில் உங்களால் ரூ.8 லட்சத்தைச் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. அதுவும் மாதம் ரூ.5000 சேமித்தால் போதும். அது எப்படி இதில் நாம் அதிக லாபம் எப்படிப் பெற முடியும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிப்பு முக்கியம் என்பதை மெல்ல உணர தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரும் பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

personal finance post office investment

சேமிப்பு

ஆனால், ஒரு முதலீட்டைத் தொடங்கும் முன்பு அதில் ரிஸ்க் எவ்வளவு இருக்கும். எந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என நமக்குப் பல சந்தேகங்கள் இருக்கும். ஆனால், ரிஸ்கே இல்லாமல் மாதம் ரூ.5000 சேமித்தாலே ரூ.8 லட்சம் ஈஸியாக சேர்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றாலே போதும்.. பணத்தைச் சேமிக்க வங்கி போகலாம் ஓகே.. அது ஏன் தபால் நிலையம் போக வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் நமது தபால் நிலையங்கள் இப்போது சூப்பரான சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அதுதான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.

நாடு விட்டு நாடு பறக்கும் தங்கம்.. விலை உச்சத்திற்கு போக இதுவே காரணம்! இனி குறைய வாய்ப்பு இருக்கா?
நாடு விட்டு நாடு பறக்கும் தங்கம்.. விலை உச்சத்திற்கு போக இதுவே காரணம்! இனி குறைய வாய்ப்பு இருக்கா?

தபால் நிலைய சேமிப்பு

தபால் நிலையங்களில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் சேமிப்பிற்கு நமக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது பல வங்கிகள் ரெக்கரிங் டெபாசிட்டிற்கு வழங்கும் தொகையை விட அதிகம். இதுவே நாம் வங்கியைத் தவிர்த்துவிட்டு தபால் நிலையங்களில் முதலீடு செய்ய முதன்மையான காரணம். மேலும், தபால் துறை நேரடியாக மத்திய அரசுக்குக் கீழ் வரும் என்பதால் திவால் ஆகவும் வாய்ப்பு குறைவு என்பதால் பாதுகாப்பிற்கும் பிரச்சினை இல்லை.

தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட்

சரி, விஷயத்திற்கு வருவோம் ரூ.5000 மூலம் எப்படி ரூ.8 லட்சம் சேமிக்கலாம். நீங்கள் முதலில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை தொடங்குங்கள். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தீர்கள் என்றால் ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்து இருப்பீர்கள்.. மேலும் 6.7 சதவீத வட்டியைக் கணக்குப் போட்டால் ரூ.56,830 வட்டியாகவே கிடைக்கும். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் உங்கள் கையில் ரூ.3,56,830 இருக்கும்.

ரூ.8 லட்சம் சேமிக்கலாம்

இருப்பினும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டை முடிக்காமல் தொடரவும் தபால் நிலையங்கள் அனுமதிக்கிறது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் தொடர்ந்து ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். அதன்படி பார்த்தோம் என்றால் மொத்தம் 10 ஆண்டுகளில் நாம் ரூ.6,00,000 முதலீடு செய்து இருப்போம். அதற்கு 6.7 சதவீத வட்டியில் ரூ.2,54,272 வட்டியாக மட்டும் கிடைத்திருக்கும். இதன் மூலம் 10 ஆண்டுகளில் எந்தவொரு ரிஸ்கும் இல்லாமல் ஈஸியாக ரூ.8.54 லட்சத்தை நாம் சேமிக்கலாம்.

தங்கம் vs ஷேர் மார்க்கெட்.. இரண்டில் எது பெஸ்ட்? எதில் லாபம் அதிகம் கிடைக்கும்! எது பாதுகாப்பானது?
தங்கம் vs ஷேர் மார்க்கெட்.. இரண்டில் எது பெஸ்ட்? எதில் லாபம் அதிகம் கிடைக்கும்! எது பாதுகாப்பானது?

மற்ற முதலீடுகள் இருக்கும் போது ரெக்கரிங் டெபாசிட் முறையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்குப் பதில் ஈஸி. பங்குச்சந்தை, கடன் பத்திரம் என எதுவாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம்.. ஆனால், தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட் முறையில் ரிஸ்க் மிகக் குறைவு. மேலும், வழக்கமான சேமிப்பு கணக்கைக் காட்டிலும் இதில் அதிக வட்டி கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் ரூ.5000 போட வேண்டும் என்பதால் இது சேமிப்பில் நமக்கு ஒரு நல்ல பழக்கத்தைக் கொடுக்கும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
English summary
Invest just ₹5000 in the Post Office Recurring Deposit Scheme and earn over ₹8 lakhs (தபால் நிலைய சேமிப்பு திட்டத்தின் மூலம் மாதம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்): All things to know about Post Office Recurring Deposit Scheme.
Read Entire Article