மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி விடுதி காவலர் கைது

2 days ago
ARTICLE AD BOX

காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கல்லூரி விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி, படித்து வருகிறார்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மாணவி கழிப்பறை செல்ல முயன்றபோது, மாணவியை விடுதியின் காவலர் பின்தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனிடையே, மாணவி கூச்சலிட்டதால், விடுதியில் இருந்தவர்கள் ஒன்றுகூடி, மாணவியை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவலாளியின் நடவடிக்கையை மாணவி விவரித்தவுடன், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு காவலாளி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததால், காவலாளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். விடுதி காவலரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

Read Entire Article