ARTICLE AD BOX

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. மாணவர்கள் படிப்பதும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணா அனைத்து மாணவ, மாணவிகளையும் வழக்கம் போல மேடைக்கு முன்பு வந்து நிற்க சொன்னார்.
அவர்கள் வந்ததும் தரையில் விழுந்து வணங்கி 50 தோப்புக்கரணம் போட்டார். பின்னர் இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள் என வருத்தத்துடன் கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.