மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

5 hours ago
ARTICLE AD BOX

வரும் மார்ச் 13ஆம் தேதி அன்று காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பர்.

ஒரே இடத்தில் பல்வேறு கோயில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வதால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசிமகம் தீர்த்தவாரி விழாவையொட்டி பக்கதர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு நிர்வகம் செய்து வருகிறது. திருட்டு, மோதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
Read Entire Article