மாசி மகம்: புதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 13ல் பள்ளிகளுக்கு விடுமுறை!

2 hours ago
ARTICLE AD BOX

புதுச்சேரி மாநிலத்தில் மாசி மக பெருவிழாவையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்துக்கு மார்ச் 13ல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்களும் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவது வழக்கம்.

இந்த நிலையில், நடப்பாண்டு மாசி மக பெருவிழா வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது. எனவே, மார்ச் 13 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்வுகள், வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article