ARTICLE AD BOX
மலையாளத்தில் 2 பேர்.. தமிழில் 7 பேராம்.. மீனா பற்றி பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!
சென்னை: கடந்த 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் புகழ் பெற தொடங்கினார். கண்ணழகி மீனா என்றே ரசிகர்கள் இவரை அழைத்தனர். கணவரை இழந்த இவர், மகளுடன் தனியாக வசித்து வந்தாலும் நண்பர்களுடன் விழா மேடைகளில் ஜொலித்து வருகிறரார். இதனிடையே, பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து பேசியுள்ளது விவகாரத்தை கிளப்பியுள்ளது.
மீனா பொண்ணு: முத்து படத்தின் மூலம் ஹீரோயினாக மீனா அறிமுகம் ஆனார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருக்கே ஜோடியாக நடித்தார். எஜமான் படத்தில் இவர்களது ஜோடி அமோக வரவேற்பை பெற்றது.அதைத்தொடர்ந்து வீரா படத்தில் நடித்தனர். ரசிகர்களால் கவரப்பட்ட ஜோடி என்றால் ரஜினி மீனாதான். பின்னர், கமலுடன் அவ்வை சண்முகி படத்தில் நடித்தார். நாட்டாமை படத்தில் இடம்பெற்ற மீனா பொண்ணு பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. ரசிகர்களால் செல்லமாக கண்ணழகி என்றும் அழைக்கப்பட்டார்.

கணவர் மரணம்: சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி, பாலைய்யா ஆகியோரது படங்களில் மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மீனா பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் மீனாவை பெரிதளவில் பாதித்தன. வித்யாசாகர் மரணம் குறித்த சர்ச்சை செய்திகளுக்கும் பதிலடி கொடுத்தார் மீனா.
தோழிகள்: கணவர் இறந்த பிறகு ரியாலிட்டி ஷோக்களில் ஆர்வம் செலுத்தி வந்த மீனா பல ஷோக்களில் நடுவராக இருந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார். சினிமாவில் இவர்களுக்கு தோழியாக இருக்கும் சங்கவி, சங்கீதா, ஸ்ரீதேவி ஆகியோருடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில் தோழிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. அதேபோன்ரு பிரபுதேவா நடத்திய நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மேடையில் ஏறி நடனம் ஆடினார். வயது ஆனாலும் அழகு குறையாத மீனா என்று புகழ்ந்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
பயில்வான் ரங்கநாதன்: திரையுலகில் காமெடி, வில்லன் ரோல்களில் அசத்தி வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் நடத்தி வரும் யூடியூப் சேனல்களில் நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்துவார். இதற்கு நடிகைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மீனா குறித்து தகவலை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமா: தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா ஏன் முன்னேற்றம் காண்கிறது என்பதற்கு பயில்வான் ரங்கநாதன் பல காரணங்களை தெரிவித்தார். அதில், மலையாள சினிமாவில் ரஜினி , கமலுக்கு இணையான புகழை கொண்டவர்கள் மம்மூட்டி, மோகன்லால். ரஜினி இங்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் மலையாளத்தில் 10 கோடிக்கு மேல் தாண்டுகிறார்களா என்பதே சந்தேகம் தான். ஏனெனில் மலையாளத்தில் கதைதான் ஹீரோ. படத்திற்கான செலவுக்குத்தான் பணத்தை அதிகமாக செலவிடுகின்றனர்.
நல்ல படங்கள்: இதனால், நல்ல கதைகொண்ட படங்கள் மலையாளத்தில் அதிகம் வருகிறது. வெற்றி பெறும் படங்களாக அமைகிறது. ஒரு படத்தில் நடிக்க பயில்வான் போகும் போது அந்த படத்தில் மீனாவும் இருந்துள்ளாராம். அவருக்கு உதவியாளராக இரண்டு பேர் தான் இருந்தனர். ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நானும் நடித்தேன். அப்போது மீனாவுக்கு உதவியாளராக 7 பேர் இருந்தார்கள். இதுதான் மலையாள சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.