மலையாள முன்னணி நடிகருடன் இணையும் மாளவிகா மோகன்! இது யாருமே எதிர்பார்க்கலையே!

4 days ago
ARTICLE AD BOX

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார் மாளவிகா மோகன்.

நடிகை மாளவிகா மோகன் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அதேபோல் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்தாண்டு வெளியாகவுள்ளது இந்த படம். தமிழில் இவர் நடித்து கடைசியாக வெளியான படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் ஆதரவை பெற்றார்.

தற்போது தமிழில் சர்தார் 2 படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரபல நடிகை
Malavika mohan

இப்படியான நிலையில், தற்போது மாளவிகா மோகன், மோகன் லால் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு மிகப்பெரிய நடிகருடன் அதாவது சீனியர் நடிகருடன் இவர் நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1980ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான மோகன்லால் தற்போது 360 வது படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு ஆண்டிற்கு அதிக படங்கள் நடிப்பதில் பெயர் போனவர் இவர். தற்போது இந்த ஆண்டு இவருக்கு லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2 – எம்புரான், வ்ருஷாபா, ராம், ராம்பான், ஆகிய படங்கள் லைனப்பில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் போக விசா வேண்டுமாமே!
Malavika mohan

சமீபத்தில் இவர் நடித்து இயக்கிய பர்ரோஸ் படம் ஹாலிவுட் ரேஞ்சிக்கு ஒரு ஃபான்டஸி மூவியாக அமைந்தது. இந்தப் படம் கடந்த 22ம் தேதி ஓடிடியில் வெளியானது. மேலும் இவர் நடிக்கும் 360 வது படத்திற்கு துண்டரம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருக்கிறார். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 56வது படமாகும். அந்தளவிற்கு புகழ்பெற்ற ஜோடி. ஆகையால், இந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கிறது.

ஷோபனாவுடன் நடிக்கும் அதே நேரத்தில் மறுபக்கம் இளம் நடிகையுடன் மோகன் லால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article