மலையாள நடிகர் ஓபன் டாக்.. அட்லீயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன சொன்னார்?

10 hours ago
ARTICLE AD BOX

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனர் ஆனவர் அட்லீ. தொடக்கத்தில் ஆரியாவை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி, பிகில், மெசல் படங்களை இயக்கி பிரபல இயக்குனர் ஆனார். கடைசியாக பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதற்கு சாட்சியாக அப்படம் ரூ.1000 கோடி வரை வசூல் செய்தது. இதனால் அட்லீயின் மெளசும் அதிகமானது. 

தற்போது அவர் அல்லு அர்ஜூனை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். இப்படத்திற்கு அவர் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அல்லு அர்ஜூனும் புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். படத்தின் பட்ஜெட்டை விட சம்பளம் அதிகமாக இருப்பதன் காரணமாக தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரிக்க தயங்குகின்றனராம். 

மேலும் படிங்க: “நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான்!” வைரலாகும் சாய்ரா பானுவின் பதிவு..

மனம் திறந்த நீரஜ் மாதவ் 

இந்த நிலையில், மலையாள பிரபல நடிகரான நீரஜ் மாதவ் இயக்குநர் அட்லீ குறித்து பேசி உள்ளது கவனம் பெற்றுள்ளது. நீரஜ் மாதவ் பேசியதாவது; இயக்குநர் அட்லீ என்னை தொடர்பு கொண்டு ஜவான் படத்தில் நடிக்க கேட்டிருந்தார். அந்த கதாப்பாத்திரமோ சிறியதாக இருந்ததால், நான் அதை மறுத்துவிட்டேன். அதேசமயம் அந்த கதாபாத்திரம் என்க்கு முக்கியம் வாய்ந்தது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். 

அந்த சமயத்தில் மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வமும் இல்லை என்பதால் அதனை அப்போது மறுத்துவிட்டேன். சிலர் என்னை திட்டினார்கள், நல்ல வாய்ப்பை விட்டுவிட்டாய் என்று, ஆனால் அதை நினைத்து ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை. பெரிதாக எதையும் இழந்தது போல் தோன்றவில்லை என தெரிவித்துள்ளார். 

நீரஜ் மாதவ் பேசி உள்ளது தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அட்லீயை கலாய்க்க தொடங்கி விட்டனர். நல்ல வேலை அப்படத்தில் நீங்கள் நடிக்க வில்லை என்றும், ஒருவேளை நடித்திருந்தால், உங்களையும் கொன்றிருப்பார் என்றும் கடுமையாக இயக்குநர் அட்லீயை சாடி வருகின்றனர் நெட்டிசன்கள். 

மலையாள நடிகர் நீரஜ் மாதவ், ஒரு வடக்கன் செல்ஃபி, ஆர்டிஎக்ஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். சிம்புவிற்கு நண்பனாகவும், வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: நடிகர் மாதவன் நடிக்கும் டெஸ்ட்! அவரின் கதாபாத்திரம் இது தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article