மலையாள நடிகர் இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே.. அட்லீயை ரோஸ்ட் செய்யும் ரசிகர்கள்!

18 hours ago
ARTICLE AD BOX

மலையாள நடிகர் இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே.. அட்லீயை ரோஸ்ட் செய்யும் ரசிகர்கள்!

News
oi-Pandidurai Theethaiah
| Published: Sunday, March 16, 2025, 15:22 [IST]

சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் ஆகிய படங்கள் மெஹா ஹிட் அடைந்தன. அதிலும் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால், அட்லீயின் மார்க்கெட்டும் உயர்ந்தது. ஷாருக்கானும் செம ஹேப்பி ஆனார். இந்நிலையில், மலையாள நடிகர் ஒருவர் ஜவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டாராம். இதற்கான காரணம் குறித்தும் அவரே தெரிவித்துள்ளார்.

அட்லீ தனது ஸ்டைலில் பல்வேறு சமூகப் பிரச்னைகளைக் கமர்ஷியல் கலந்த பொழுதுபோக்கு அம்சமாக இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாருக்கான் தந்தை - மகன் என 2 வெவ்வேறு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருந்தன. ஜவான் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் பாராட்டையும் பெற்றது.

malayalam-actor-refuses-to-act-in-atlees-jawan

ஊழல்: இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ ஊழலை பற்றி எடுக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் குழந்தைகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது, அரசின் ஆயுதக் கொள்முதலில் நடக்கும் ஊழலால் தரமற்ற ஆயுதங்களை ஏந்திய ராணுவ வீரர்கள் போர்முனையில் உயிரிழப்பது, தேசத்தைக் காக்கும் வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ஊழல்வாதிகளின் சதியால் தேசத் துரோக முத்திரை குத்தப்பட்டு பலியாக்கப்படுவது என பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உணர்வுபூர்வமாக இயக்கிருந்தார் அட்லீ.

அல்லு அர்ஜூன்: ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கு அவர் 100 கோடி சம்பளம் கேட்டதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க தயக்கம் காட்டுவதால் அல்லு அர்ஜூன் படம் டேக் ஆப் ஆகாமல், பேச்சுவார்த்தையுடனே தொடர்கிறது. அல்லு அர்ஜூனும் புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். படத்திற்கு போடும் பட்ஜெட்டை விட சம்பளம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனராம். அட்லீயை நம்பி இறங்குவது ஆழம் பார்ப்பது போன்று இருக்கிறதாம்.

malayalam-actor-refuses-to-act-in-atlees-jawan

ஜவான் பட வாய்ப்பு: இந்நிலையில், ஒரு வடக்கன் செல்ஃபி, ஆர்டிஎக்ஸ் படஙகளில் நடித்து பிரபலமடைந்த நீரஜ் மாதவ் அட்லீ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கு நண்பனாகவும், வில்லனாகவும் நடித்திருந்தார். தி பேமிலி மேன் வெப் தொடரிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரஜ் மாதவ் சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குநர் அட்லீ எனக்கு போன் செய்து தவான் படத்தில் நடிக்க கேட்டிருந்தார். அப்படத்தில் சிறிய கதாப்பாத்திரம் தான் என கூறினார்.

malayalam-actor-refuses-to-act-in-atlees-jawan

ஆனால், அது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் நான் மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அந்த ஜவான் பட வாய்ப்பை மறுத்துவிட்டேன். இதற்கு பலரும் என்னை திட்டி பேசினார்கள். ஆனால், அந்த பட வாய்ப்பை இழந்ததற்காக பெரிதாக வருத்தம் ஏற்படவில்லை. எதையும் இழந்தது போன்ற உணர்வும் இல்லை என தெரிவித்துள்ளார். தற்போது இவர் பேசிய பேட்டி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அட்லீயை ரோஸ்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

நல்ல வேலை நீங்க நடிக்கவில்லை இல்லையென்றால் உங்களை அட்லீ சாவடித்திருப்பார். அட்லீ படத்தில் ஹீரோயின்களை, ஹீரோவின் நண்பர்களை சாவடிப்பது போன்று தான் எடுக்கிறார் என்றும் நல்லா நடித்த கதிரை பிகில் படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் செய்துவிட்டார் என்றும் பங்கமாய் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Malayalam actor refuses to act in Atlee's Jawan: ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக மலையாள நடிகர் தெரிவித்தார்.
Read Entire Article