ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/6LKb59e2hHZZlYebZMrz.jpg)
பெரும்பாலும் சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக வெல்லம் கருதப்படுகிறது. இது உடலை புத்துணர்ச்சியாக்க, உற்சாகமாக வைக்க உதவுகிறது. வெல்லத்தில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்ஸ் நிறைந்துள்ளன.
/indian-express-tamil/media/media_files/8vcIWq76uLla8tJwmtO0.jpg)
குறிப்பாக குளிர் சீசனில் வெல்லம் எடுத்து கொள்வது உடலில் இருக்கும் வெப்பத்தைத் தக்கவைத்து, குளிரிலிருந்து உடலை பாதுகாக்கிறது. தவிர நல்ல செரிமானத்திற்கும் வெல்லம் உதவுகிறது.மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. ரத்த சோகை பாதிப்பு இருப்பவர்களுக்கு வெல்லம் ஒரு சிறந்த தீர்வாகும், ஏனெனில் இது ரத்த சோகையை போக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2A0jTmT7QWY030hYEmHh.jpg)
உணவுகளில் நெய் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெய் போன்ற பால் பொருட்கள் நமது டயட்டில் ஒரு முக்கிய அங்கமாகும், இவை மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கால்சியம், வைட்டமின் டி போன்றவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் நல்லது.
/indian-express-tamil/media/media_files/34qvu7UNLhpuz0VxddgN.jpg)
இந்த ஊட்டச்சத்துக்கள் எடுத்து கொள்வது எலும்புகளை வலுப்படுத்துகிறது. இது சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனுடன், மூளையையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/66WKA9icWCoaONGCcrrE.jpg)
வெல்லம் மற்றும் நெய் இரண்டும் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெல்லம் மற்றும் நெய் குடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது மலச்சிக்கல் மற்றும் உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
/indian-express-tamil/media/media_files/PkeSMvp8wDaKbOskNzAj.jpg)
நெய்யில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் (fatty acids) நம் சருமத்திற்கு உள்ளிருந்து தேவையான ஊட்டத்தை கொடுத்து பளபளப்பாக்குகின்றது. மேலும் கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்க நெய் உதவுகிறது, மேலும் முடி உதிர்வை தடுக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/jaggery_1200_getty.jpeg)
வெல்லத்தில் இயற்கை சர்க்கரை உள்ளது, இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. எனவே தான் உணவு சாப்பிட்ட பிறகு பிறகு வெல்லம் மற்றும் நெய் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் சாப்பிட்டு முடித்த பிறகு இந்த கலவையை எடுத்து கொள்வது சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கி நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/zDf9HMjdWNStlmZPgp9v.jpg)
நெய்யில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் உள்ளது மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இவை மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனுடன் சேர்த்து சாப்பிட அறிவுறுத்தப்படும் வெல்லம் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது.