ARTICLE AD BOX
மும்பையில் கத்திக்குத்து பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த பிரபல நடிகர் சைப் அலிகான் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அதற்கு முன்பு தக்க சமயத்தில் தன்னை மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து சந்தித்துள்ளார். அப்போது அவர் ஆட்டோ ஓட்டுனர் ஆன பஜன்சிங் ராணாவுக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில், விரைவாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதற்கு நன்றி கூறினார். எனக்கு அவரிடம் எந்த கோரிக்கையும் இல்லை. பணம் பற்றி யோசிக்கவும் இல்லை, அவர் எனக்கு கொடுத்ததை வாங்கிக் கொண்டேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.