மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்.. உடல் நிலை குறித்து சகோதரி சொன்ன தகவல்..!!

16 hours ago
ARTICLE AD BOX

இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மற்றொரு சகோதரியான பாத்திமா அவரது உடல் நலம் பற்றி கூறியதாவது:- “தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார். தொடர் பயணங்களால் பெரிய களைப்பில் இருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் dehydration ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும்படி எதுவும் இல்லை” என்றார்.

அதன்பின் உடல் சோர்வு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான். அங்கு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பியதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இன்று காலை ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை அமைந்துள்ளது.

Read more: விளம்பர மாடல் திமுக பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்..!! – டாஸ்மாக் ஊழல் குறித்து விஜய் காட்டம்

The post மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்.. உடல் நிலை குறித்து சகோதரி சொன்ன தகவல்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article