மருத்துவ குணம் நிறைந்த சட்னி வகைகள் செய்து சுவைப்போமா?

2 hours ago
ARTICLE AD BOX

தூதுவளை சட்னி:

தூதுவளை இலை ஒரு கப் 

சின்ன வெங்காயம் 10 

பூண்டு 6 பற்கள் 

காய்ந்த மிளகாய் 4 

தேங்காய்த் துருவல் கால் கப் 

புளி எலுமிச்சை அளவு 

உப்பு தேவையானது 

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

தூதுவளை இலையில் முட்கள் இருக்கும். எனவே அவற்றை கவனமாக ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் மிளகாயை போட்டு வறுத்து அத்துடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து ‌ நன்கு வதக்கவும்.  அத்துடன் பூண்டு,  சின்ன ‌வெங்காயம்,  தேங்காய் துருவல்,  புளி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

சிறிது ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து தேவையான உப்பு போட்டு அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்ட சுவையான தூதுவளை சட்னி தயார். கெட்டி சட்னியாக  செய்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.  சிறிது நீர் கலந்து இட்லி,  தோசைக்கும் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.

சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணம் தரும். கபத்தை இளக்கி எளிதில் வெளியேற்றும்.

முருங்கை சட்னி: 

முருங்கை இலை 2  கைப்பிடி 

சின்ன வெங்காயம் 100 கிராம்

தக்காளி 2

புளி எலுமிச்சை அளவு 

சீரகம் 1 ஸ்பூன் 

மிளகாய் 6 

கடுகு 1 ஸ்பூன்

தனியா 2 ஸ்பூன் 

கறிவேப்பிலை சிறிது

உப்பு தேவையானது 

கொத்தமல்லி சிறிது 

எண்ணெய்  4 ஸ்பூன் 

இதையும் படியுங்கள்:
காபி பிரியரா நீங்கள்? அப்போ இந்த ரகசியங்கள் உங்களுக்குத்தான்!
A medicinal chutney

பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு கடுகு பொரிந்ததும் முதலில் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.  பின்பு அதில் உருவிய முருங்கைக் கீரையை சேர்த்து  பட படவென பொரிந்து நன்கு வறுபட்டதும்  கறிவேப்பிலையை சேர்த்து ரெண்டு நிமிடம் வதக்கவும். 

பிறகு தனியாவை  சேர்த்து,  நறுக்கிய தக்காளி,  சீரகம் , புளி அனைத்தையும் போட்டு  நன்கு வதக்கவும். இரண்டு  நிமிடங்கள் நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி தழையை சேர்த்து  தேவையான அளவு உப்பு,  போட்டு  சிறிது ஆறியதும் விழுதாக இல்லாமல் சிறிது கரகரப்பாக அரைக்க சூப்பரான முருங்கை கீரை சட்னி தயார். 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். ருசியாக இருக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.

சிவப்பு பொன்னாங்கண்ணி சட்னி:

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை 2  கப் 

பூண்டு 4 பற்கள் 

இஞ்சி ஒரு துண்டு புளி சிறிய

சின்ன வெங்காயம் 10

புளி நெல்லிக்காய் அளவு 

உப்பு தேவையானது 

வறுக்க: உளுத்தம் பருப்பு  2 ஸ்பூன், மிளகாய் வற்றல் 6,  தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க:  கடுகு,  கறிவேப்பிலை,  நல்லெண்ணெய்

இதையும் படியுங்கள்:
சுவையான பைனாப்பிள் ரசம் மற்றும் பீட்ரூட் சாலட்: வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!
A medicinal chutney

நாட்டு பொன்னாங்கண்ணியைவிட சீமை பொன்னாங்கண்ணியான சிவப்பு பொன்னாங்கண்ணி மருத்துவ குணம் நிரம்பியது. கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து  கழுவி வைக்கவும்.  வாணலியில் எண்ணெய்  விட்டு உளுத்தம் பருப்பு,  மிளகாய் இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு,, கீரையைப்  போட்டு வதக்கவும்.  அத்துடன் தோல் சீவி துண்டுகளாக்கிய  இஞ்சியையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். முதலில் வறுத்த பருப்பு, தேங்காய், மிளகாயுடன்  தேவையான உப்பு,  புளி சேர்த்து பொடித்துக்கொண்டு வதக்கி வைத்துள்ள கீரை வகையறாக்களை சேர்த்து அரைக்கவும்.

வாணலியில்  நல்லெண்ணெய் விட்டு கடுகு,  கறிவேப்பிலையை சேர்த்து கடுகு பொரிந்ததும் தயாராக உள்ள சட்னியில் சேர்க்க மிகவும் ருசியான பொன்னாங்கண்ணி கீரை சட்னி தயார்.

பித்தப்பை,  கல்லீரலை பலப்படுத்தும்.  உடல் சூட்டை குறைக்கும். குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும் சிறந்த மருத்துவகுணம் நிறைந்த கீரை இது.

Read Entire Article