ARTICLE AD BOX
தலைநகர் தில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார்.
தில்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தலும், பிப்.8ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியா போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
இந்த நிலையில், தில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.