ARTICLE AD BOX

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் தமிழ்சினிமாவில் வந்து விட்டார்கள். ஆனால் மிமிக்ரி கலைஞர்களாக வந்தவர்கள் ஒருசிலர் தான். தாமு, மயில்சாமி, குடும்பஸ்தன் ஹீரோ மணிகண்டன் ஆகியோரைச் சொல்லலாம். இவர்களில் மயில்சாமி 1977ல் தாவணிக்கனவுகள் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
நடிக்கும் வாய்ப்பு: அப்போது எம்ஜிஆர் மாதிரி பாக்கியராஜிடம் பேசி அசத்தினார். அதனால் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவுண்டமணி, விவேக் ஆகியோர் உடன் இணைந்து நடித்துள்ளார். நான் அவன் இல்லை 1 மற்றும் 2ம் பாகங்கள், தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம் உள்பட பல சூப்ப்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நலிந்த கலைஞர்களுக்கு உதவி: சன்டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். இவரது காமெடியான நடிப்பு அருமையாக இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தி விட மாட்டார். இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது. அதே போல நலிந்த கலைஞர்களுக்கு வெளியே தெரியாமல் பல உதவிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தீபா நெகிழ்ச்சி: இவர் 2023ல் சிவராத்திரி பூஜைக்குப் போய்விட்டு திரும்புகையில் மாரடைப்பால் காலமானார். இது திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இன்றும் இவரைப் பற்றி பல கலைஞர்களும் பேசுகிறார்கள் என்றால் இவர் செய்த உதவிகள்தான் காரணம். அந்த வகையில் நடிகை தீபாவும் இவரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் சில தகவல்களைப் பேசியுள்ளார். என்னன்னு பாருங்க.
கேட்காமலேயே கொடுத்த கடவுள்: மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நானும் மயில்சாமி அண்ணனும் ஒண்ணா நடிச்சோம். என் பையனுக்கு இருக்கும் இதய பிரச்சனை தெரிந்த உடனே மயில்சாமி அண்ணன் எனக்குப் போன் பண்ணினார். பையனுக்கு உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டேன். எவ்வளவு பணம் வேணும்னு கேட்டாரு.
எனக்கு ஆச்சரியமா ஆகிடுச்சு. ஏன்னா நண்பர்கள், சொந்தக்காரங்க கிட்ட கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க. கடவுள்கிட்ட நம்ம கேட்கணும்னா கூட சாமி எனக்குக் கொடு என்று கேட்டா தான் கொடுக்கும். ஆனா கேட்காமலேயே கொடுத்த கடவுள் மயில்சாமி அண்ணன்தான் என்று நெகிழ்ந்து பேசுகிறார் நடிகை தீபா.