ARTICLE AD BOX
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், தாயில்பட்டி, கலைஞர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பொன்னுசாமி (வயது 39). இவரின் மனைவி முனீஸ்வரி (வயது 32). தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதனிடையே, இருவருக்கும் இடையே சமீபகாலமானாக கருத்து வேறுபாடு, குடும்ப தகராறு இருந்துள்ளது. சம்பவத்தன்று நடைபெற்ற தகராறில், மனனவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமணம் செய்த 2 மாதத்தில் பிரிவு, 4 மாதத்தில் தற்கொலை.. பெண்ணின் வாழ்க்கையை முடித்த காதல்..!
மனைவி எரித்துக்கொலை
இந்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் நேரில் வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசார ணியில், குடும்ப சண்டையில் கணவர் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்து நடனமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து, பொன்னுசாமியின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர் மனைவியை கொலை செய்ததாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதலித்து குத்தமா? இளம்பெண் கொடூர கொலை.. முக்கோண காதலால் சேலத்தில் நடந்த பயங்கரம்.!