ARTICLE AD BOX
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையைச் சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காகப் பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாகக் கழித்துள்ளனர்.
இப்படிச் சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி.
பியாவோவின் மனைவியான லாங்கிற்குக் கடந்த 2023 ஆம் ஆண்டுக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர்.
பிறகு லாங்கிற்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
எப்படியும் ஒருநாள் தனது உடல்நிலை மோசமடையும் அதற்கும் தன்னுடைய விருப்பதைத் தனது கணவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதன்படி, தான் இறந்த பிறகு தனது உடமைகளைப் பானைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நாட்களும் கடந்தன... இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாங்கின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவியின் விருப்பதை நிறைவேற்றுவதற்காக, அவரின் சாம்பலை களிமண்ணுடன் கலந்து பானை ஒன்றை வடிவமைத்துள்ளார் கணவர்.
தனது மனைவி உயிரிழந்தாலும், ’எங்களின் காதல் இந்த உலகத்தைவிடப் பெரியது. அது என்றும் அழியாது’ என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், பியோ, தனது மனைவியின் இறுதி ஆசையையும் நிறைவேற்றினார்.
இதுகுறித்துப் பதிவிட்ட பியோ, தனது மனைவியின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், இதன்மூலம் இருவரும் இறந்த பிறகு சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் உண்மையான காதல் என்றால் இது தானோ?!